ஏர்பஸ் கொள்முதல் விவகாரம்: நாமல் ராஜபக்சவை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!
புதிய இணைப்பு
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நாளை (28) நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, அந்த அறிக்கையை இம்மாதம் 30ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை காவலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஒரு குழுவினருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு இன்று(27.10.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கமைய, இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான கையூட்டுச் சம்பவம் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்று (27.10.2026) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
13ஆம் திகதி சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விவரங்கள்
இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விவரங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு இன்று (27) மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.