பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் அறிவிப்பு(Photo)

Ampara Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Farook Sihan Jun 16, 2022 08:05 AM GMT
Report

வீடொன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடொன்றில் கடந்த 08 ஆம் திகதி உபகரணங்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை 24 மணிநேரத்திற்குள் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருட்டு சம்பவம்

பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் அறிவிப்பு(Photo) | Theft Due Economic Crisis

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டின் உரிமையாளர் தனிப்பட்ட தேவை நிமித்தம் கொழும்பிற்கு சென்றிருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் நேற்று(15) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

உரிமையாளர் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸாருடன் பொதுமக்கள் இணைந்து மேற்குறித்த சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இன்று(16) சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் அறிவிப்பு(Photo) | Theft Due Economic Crisis

இவ்வாறு கைதான சந்தேக நபர்களில் 28 வயதானவர் பிரதான சந்தேக நபர் எனவும் ஏனைய இரு சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைதான மூன்று சந்தேக நபர்களையும் இன்றைய தினம்(16) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் அறிவிப்பு(Photo) | Theft Due Economic Crisis

அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் பல அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US