காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்கள்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Missing Persons Sri Lankan Tamils Government Of Sri Lanka
By Rakesh Jun 23, 2026 01:47 PM GMT
Report

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் மீதான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்து எடுப்பது என்பது முதற்கட்டத் தனித்துவமான ஒரு செயற்பாடாகும்.

பிரபல ஹோட்டலில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பிரபல ஹோட்டலில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

அறிவியல் அறிக்கை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலும் முதற்கட்டமாக என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதன் பிற்பாடு, அந்த என்பு மாதிரிகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது என்பது இரண்டாவது நடவடிக்கையாகக் காணப்படுகின்றது.


இந்த இரண்டாவது நடவடிக்கையின் போதே அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் முழுமையாக ஆராயப்பட்டு, அந்த மனிதர்களின் வயது, பாலினம் மற்றும் அவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணங்கள் கண்டுபிடிக்கப்படும்.

அத்துடன், அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளினுடைய கால எல்லை பற்றி தொல்லியல் திணைக்களத்தால் அறிவியல் அறிக்கை ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இவை இரண்டும் சமர்ப்பிக்கப்பட்டதன் பிற்பாடு, மூன்றாவது கட்டமாகவே காணாமல்போன உறவுகள் தொடர்பானத் தேடுதல் விவகாரங்கள் ஆரம்பிக்கப்படும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது கைது செய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடுகளை வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு, பாதிக்கப்பட்ட உறவினர்களின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

ஏற்கனவே கொக்குத்தொடுவாயிலும் அந்த விடயங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு, தற்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அது தொடர்பாக நீதிமன்றத்திடம் அறிக்கையிடுமாறு கூறப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஞானசார தேரர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இறுதித் தீர்மானம் 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கை ஒரு சிறந்த முன் உதாரணமாகக் கொண்டுதான், நாட்டில் பதிவாகி வரும் ஏனைய புதைகுழி வழக்குகளின் சட்டப் பிரச்சினைகளும் கையாளப்படும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்கள்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Government No Steps Collect Dna Missing Persons

இதுவே சர்வதேச நியதிகளிலும் பின்பற்றப்படுகின்ற வழக்கமான நடைமுறையாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரசாங்க நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதனையும் இதுவரை உருவாக்கவில்லை.

இனிவரும் காலங்களிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணுவைச் சேகரித்துப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால், அதனைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஒப்புதலோடு மிக இலகுவாக முன்னெடுக்க முடியும்.

எனினும், இதற்கு அரசினுடைய முழுமையான இராஜதந்திர ஒத்துழைப்பும், தடயவியல் நிபுணர்களுடைய சர்வதேச அளவிலான உதவியும் அவசியமாகக் காணப்படுகின்றது.

மனிதப் புதைகுழி விவகாரத்தில் அடுத்தகட்டமாகச் சட்டப்பூர்வமாக எவற்றினைச் செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றமும், அகழ்வுப் பணிகளில் களத்தில் முன்னிலையாகும் நிபுணர்களுமே தங்களின் அறிவியல் கருத்துக்கள் மூலம் நீதிமன்றத்துக்குத் தெளிவுபடுத்துவார்கள். அதனடிப்படையிலேயே நீதிமன்றம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும்." என்றார். 

வீடொன்றிற்குள் பேய்கள் பாதுகாத்த அமானுஷ்ய புதையல்! 42 இலட்சத்தை இழந்த பெண் - சிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

வீடொன்றிற்குள் பேய்கள் பாதுகாத்த அமானுஷ்ய புதையல்! 42 இலட்சத்தை இழந்த பெண் - சிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்கள்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Government No Steps Collect Dna Missing Persons   

7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US