நாமலுக்கு ஆபத்தாகப் போகும் 26 குற்றப்பத்திரிக்கைகள்.. அதிர்ச்சியில் ராஜபக்ச தரப்பு
தென்னிலங்கை அரசியல் களத்தில் ராஜபக்ச குடும்பம் தற்போது எதிர்நோக்கி வரும்சிக்கல்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது.
குறிப்பாக, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி மற்றும் மகன் நாமல் ராஜபக்சவின் கைதுகள் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தன.
இந்நிலையில், தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் காணும் இடத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது உண்மையில் நாமல் ராஜபக்சவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுடுகின்றது.
இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,