ஞானசார தேரர் விடுதலை குறித்து மகாநாயக்க தேரர்கள் மௌனம் : அரச தரப்பு வெளியிட்ட தகவல்
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் இன்னும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (27.10.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் விதிமுறைகள்
இருப்பினும், அரசாங்கம் எப்போதும் நாட்டின் தற்போதைய சட்டத்தின்படியே செயல்படும் என்றும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு எந்த மாற்றங்களையும் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஞானசார தேரர் தொடர்பாக பௌத்த பீடங்களின் நான்கு தலைமைப்பீட தேரர்கள் சிறைச்சாலை ஆணையாளருக்கு முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு இணங்க சிறை விதிமுறைகள் மாற்றப்பட்டதாகவும், எதிர்காலத்தில் அந்த விதிமுறைகளின்படியே தாம் செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS