நாளை மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் - வெளியான அறிவிப்பு
நாட்டின் சீரற்ற காலநிலைக் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழக்கத்திற்கு திரும்பு என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(27.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பரீட்சை மையங்களைத் தவிர, தீவு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை வழமை போன்று இயங்கும்.
மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்
கடுமையான வானிலை காரணமாக இன்று(27) நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
சப்ரகமுவ பிராந்தியத்தில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், வானிலை தொடர்பான பிற பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

தற்போதைய சூழலால் எந்தவொரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை மையங்களில், தேவைப்படும் இடங்களில் பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை வழமையான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
YOU MAY LIKE THIS