மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிக்கு விடுதிக்குள் நடந்த கொடூரம்
பொலன்னறுவை மாவட்டத்தில் பகமூன பகுதியில் பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மாணவியை விடுதியொன்றுக்கு அழைத்து சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞனையும், குறித்த விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பகமூன நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு நடந்த கொடூரம்
எலஹெர பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான இளைஞன், மோட்டார் சைக்கிளில் மாணவியை அழைத்துக் கொண்டு அப்பகுதியிலுள்ள விடுதியொன்றுக்குச் சென்றுள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக பெண் அதிகாரிகள், இளைஞன் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் விடுதியொன்றில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
மருத்துவ பரிசோதனை
அங்கு இளைஞன் மற்றும் விடுதியின் உரிமையாளரால் மாணவி தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளளை மேற்கொண்டு வருகின்றனர்.