பிரபல ஹோட்டலில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரை ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (23) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (22) இவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (சிஐபிசி) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாகனம் தொடர்பான விசாரணை
களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் தொடர்பில் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையொன்றினை மேற்கொண்டு வந்துள்ளது.
இந்த விசாரணைக்கு அமைவாக, நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, குறித்த பொலிஸ் பரிசோதகர் 10 இலட்சம் ரூபா பணத்தைக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர், இதற்கு முன்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில், மீதித்தொகையான 09 இலட்சம் ரூபாவைத் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam