இலட்சக்கணக்கானோரின் வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ள பணம்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் இன்று (23) முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 270,025 பயனாளி குடும்பங்கள் இந்த உதவியைப்பெற தகுதிப்பெற்றுள்ளனர்.
இன்று வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம்
இதற்கமைய, தகுதியுடைய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் மொத்தம் 3,287,163,750 ரூபாய் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
பயனாளிகள் இன்றிலிருந்து தங்களது வங்கிக்கணக்குகள் மூலம் இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan