திருமணமான இலங்கை அழகி கிரீடம் பறிக்கப்பட்ட விவகாரம்! வழக்கின் தீர்ப்புக்கு நாள் குறித்து உத்தரவு
2021ஆம் ஆண்டு திருமணமான இலங்கை அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றிய சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கான நாள் குறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணமான இலங்கை அழகித் தேர்வுப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா என்பவர் வெற்றி பெற்று கிரீடம் சூட்டப்பட்ட நிலையில், மேடைக்கு ஏறிய இரண்டு பெண்கள் அவரது கிரீடத்தை பலவந்தமாக அகற்றியிருந்தனர்.
வழக்கில் சந்தேக நபர்களாக
இதன்போது புஷ்பிகா டி சில்வாவுக்கு காயங்களும் ஏற்பட்டிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த குருந்துவத்தை பொலிஸார், முன்னாள் இலங்கை அழகிப் பட்டத்து வெற்றியாளரான கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சூலா பத்மேந்திர ஆகியோரை இவ்வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிட்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் சாட்சி விசாரணை இன்று(22) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 17ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan