செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government chemmani mass graves jaffna
By Shan Jun 23, 2026 05:30 PM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய வடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(23.06.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை இடைநிறுத்தப்படலாம்...! பரவும் செய்தி தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தேசிய அடையாள அட்டை இடைநிறுத்தப்படலாம்...! பரவும் செய்தி தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

செம்மணி மனிதப்புதைகுழி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், முதியோர்கள் என பல தரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல் | Investigation Somaratne Rajapaksa In Chemmani

இந்நிலையில், கடந்த வாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இந்த புதைகுழிவிவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதி அமைச்சரின் இந்தக் கருத்து நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல் | Investigation Somaratne Rajapaksa In Chemmani

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பிற்பாடு, குறித்த இரணுவ லான்ஸ்கோப்ரல் செம்மணியில் படையினரால் 300 – 400 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருடைய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்திரிக்கா குமாரதுங்க அரசு மீது புதைகுழி விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.

விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரிக்கை

தற்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்டு, மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பன்னாட்டு விசாரணையாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனது மனைவி மூலம் ஜனாதிபதிக்கு சோமரத்ன ராஜபக்ச கடிதமொன்றினை எழுதியிருந்தார்.

செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல் | Investigation Somaratne Rajapaksa In Chemmani

மேலும் அந்த கடிதத்தில் செம்மணியைத் தவிர, அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்தின ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநரை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே - உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநரை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே - உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்

பிரபல ஹோட்டலில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பிரபல ஹோட்டலில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US