ஒரே இரவில் ஐந்து கடைகளில் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற திருடர்கள் அவற்றின் கூரைத்தகடு மற்றும் வாயிலை உடைத்து உள்நுழைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் குறித்த கடைகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
