ஆடை விற்பனை நிலையத்தில் பணப்பையை திருடிய இளைஞர் - பொலிஸார் வலைவீச்சு
ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, கடை உரிமையாளரின் பணப்பையை (பேர்ஸ்) திருடிச் சென்ற இளைஞரைக் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான இளைஞர், கடை உரிமையாளரின் பையை (பேர்ஸ்) திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.
இதனைப் பயன்படுத்திக் குறித்த இளைஞனைக் கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கைப்பையில் 20,000 ரூபாய் பணமும், சில முக்கியமான ஆவணங்களும் காணப்பட்டதாகத் தெரிவித்த அதன் உரிமையாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

