நித்திரையில் இருந்த இளைஞன் கழுத்தறுத்து கொலை!
உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (07.02.2023) பிற்பகல் களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் வெளிவரவில்லை
சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுருத்த தனஞ்சய டி சில்வா எனப்படும் சந்துன் என்று அழைக்கப்படும் 27 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
