இலங்கை தொடர்பான ட்ரம்பின் முடிவை ஆதரிக்கும் அமெரிக்க வர்த்தக சபை
இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் வரிகளை 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டமை ஒரு பெரிய சாதனை என அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
வலுவான போட்டி
இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களை அமெரிக்க வர்த்தக சபை பாராட்டியதுடன், இந்த நடவடிக்கை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிக ஆர்வத்தையும் முதலீட்டையும் ஈர்க்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இலங்கை ஏற்றுமதியாளர்கள் வியட்நாம், மலேசியா மற்றும் இந்தியா போன்ற சிறந்த வரி விதிமுறைகளை அனுபவிக்கும் நாடுகளிடமிருந்து இன்னும் வலுவான போட்டியை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அந்த சபை எச்சரித்துள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்த அமெரிக்கா-இலங்கை ஒத்துழைப்பைத் தொடர அமெரிக்க வர்த்தக சபை வலியுறுத்தியதுடன், இதற்காக தொடர்புடைய தரப்பினருக்கு தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.