மீண்டெழுந்து விட்டது ஐ.தே.க.! - இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்கிறார் பாலித
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்துவிட்டது. அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர். மே தினத்தில் அவர்கள் மேடையேறுவார்கள் என நாம் கூறவில்லை.
தலைமைத்துவப் பிரச்சினை
அடுத்துவரும் நாட்களில்தான் அவர்கள் வருவார்கள். இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும். விழுந்துவிட்டது எனக் கூறப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது. எமது பலம் என்னவென்பது அடுத்துவரும் நாட்களிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் தெரியவரும்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவார் என நம்பவில்லை. ஐ.தே.கவில் தலைமைத்துவப் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட கரு ஜயசூரியவைப் பலிகடாவாக்கிவிட்டு சஜித் பிரேமதாஸ தப்பித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 31 நிமிடங்கள் முன்
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
இதுவரை பாடல் நிகழ்ச்சிகளில் நடக்காத ஒரு பிரம்மாண்ட பரிசுத் தொகை.... அறிவித்த சரிகமப லில் சாம்ப்ஸ் டீம் Cineulagam