கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

S. Sritharan Selvarajah Kajendren Prisons in Sri Lanka
By K. S. Raj May 07, 2024 04:25 PM GMT
Report

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த கைதிகளை அவர்கள் இன்று (07.05.2024) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேர்வின் சில்வாவுக்கு பிணை

மேர்வின் சில்வாவுக்கு பிணை

உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

இதன்போது கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேர்ந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையுமே அவர்கள் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Affna District Tamil Mp Met The Prisoners

இந்நிலையில் தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆனந்தவர்ணன், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்பு  வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத் தவணை எப்போது என்றுகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் இச்சந்திப்பின் போது ஆனந்தவர்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Affna District Tamil Mp Met The Prisoners

அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தனது விடுதலைக்காக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆனந்தவர்ணன் உடல் நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியதோடு,  இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் தாய் ஒருவரின் மர்ம மரணம் தொடர்பில் மகன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

யாழில் தாய் ஒருவரின் மர்ம மரணம் தொடர்பில் மகன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US