லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
கடுவலை - மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு முனையம் நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவிக்கையில்,
"புதிய நிரப்பு முனையம் நாளை திறக்கப்படும்.கெரவலப்பிட்டி முனையம் போதாது. நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன.
டிசம்பரில் இருந்து வாரத்தில் 2 நாட்கள். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கெரவலப்பிட்டி மற்றும் மாபிம இரண்டும் செயற்பாட்டில் இருந்தன.
எரிவாயு விநியோகம்
கெரவலப்பிட்டியை நிறுத்த வேண்டி ஏற்பட்டால், மாபிமவில் இருந்து தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும்.
" கேள்வி - தாங்கள் இவ்வாறு முதலீடு செய்து இந்த தொழிலை விரிவுபடுத்தும் போது, இதனை விற்பனை செய்யப்போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனரே?
"எங்களின் நேரடி பங்களிப்பு இல்லை. பொறுப்பு வாய்ந்த குழு ஒன்று உள்ளது. அவர்களிடம் கேட்பதுதான் சரியாக இருக்கும். எமக்கு தெரியாது"என்றும் தெரிவித்துள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |