விஜய்யின் சேலம் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு! பங்கேற்ற இளைஞருக்கு நேர்ந்த துயர சம்பவம்
விஜய் தலைமையிலான தவெக கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் மயக்கம் ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று (13.02.2026) சேலத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் உயிரிழப்பு
கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்காக நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், குறித்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 35 வயதான சுராஜ் என்பவர் என்றும் அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற இந்த உயிரிழப்பு சம்பவம் தவெக நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சுமார் அரைமணி நேரம் பேசியிருந்தாலும், அவரை காண தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
சுராஜ் மயக்கம் அடைந்து உயிரிழந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri