4 வருடங்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி..!
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததன் மூலம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 6.68வீதமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன - அமெரிக்க வர்த்தக போர்
அந்தவகையில், WTI மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 55.60 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு கட்டத்தில், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் விலை 6.34 வீதமாக குறைந்து 58.84 அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது. உலகம் கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட 2021 - பெப்ரவரிக்குப் பிறகு, ஒரு பீப்பாய் 2021 எண்ணெயின் விலை 60 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிந்தது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்ததிலிருந்து, தொடர்ந்து ஐந்தாவது நாளாக எண்ணெய் விலைகள் கடுமையாக சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா கூடுதல் வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று (09) மசகு எண்ணெயின் விலை சுமார் 7 வீதமாக குறைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
