சுவிஸில் கொலை குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 30ஆம் திகதி சூரிச்சின் Dietikon பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வன்முறை மோதலில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை குற்றச்சாட்டில் இலங்கை, சுவிட்சர்லாந்து, துனிசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.
வன்முறை
வன்முறை மோதலில் 44 வயது நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் மிகவும் நெருக்கமான நண்பரும் அதே மேல் மாடியில் வசிப்பவருமான 30 வயதுடைய சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, கடந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan