பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் : உயிரிழந்த குழந்தைகளின் விவரம் வெளியானது
பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport)பகுதியில் நேற்று முன் தினம் நடந்த கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பெண் பிள்ளைகளின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த தகவலில் 6 வயதேயான Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இவர்கள் மூவருமே கோடைகால விடுமுறை முகாமில் கலந்துகொண்ட போது கத்திக்குத்து தாக்குதலில் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் Alice என்பவரின் குடும்பத்தினரே காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவலை உறுதி செய்துள்ளனர். பின்னர் மேலும் இருவரது தகவல் வெளியானது.
இந்ந சம்பவத்தில் மொத்தம் 8 சிறுவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதோடு அதில் ஐவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.
சவுத்போர்ட் பகுதியில் Merseyside அருகே சிறார்களுக்காக கோடைகால முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் அதிகளவான சிறுவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது திடீரென்று முகாம் வளாகத்தில் நுழைந்த நபரொருவர் சிறுவர்கள் மீது சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் கைதான 17 வயது சிறுவனிடம் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது 25 சிறுவர்கள் அந்த முகாமில் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், முகத்தில் கவசம் அணிந்து, கார் சாரதிக்கு பணம் தர மறுத்து, தப்பியோடிய நபரே தாக்குதலில் ஈடுபட்டவராக இருக்கலாம் என அப்பகுதியில் உள்ள சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |