இரண்டாம் நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்று(26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் நேற்று(25) ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் போராளி ஈஸ்வரன் அஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
மேலதிக தகவல்- எரிமலை


தேவசகாயமிடம் இருந்து தப்பிக்கும் ஜனனி, மதிவதனி.. எதிர்நீச்சல் சீரியல் ஷாக்கிங் புரோமோ வீடியோ.. Cineulagam
இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம் News Lankasri
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri