தொடரும் காட்டு யானையின் அட்டகாசம்: பொதுமக்கள் விசனம்
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடி பிரதேச செயலக எல்லைக்குட்ப்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த பிரச்சினை காரணமாக கடந்த வருடமும் இரண்டு பிள்ளைகள் அனாதையாக்கப்பட்டு தாயை இழந்திருக்கின்றார்கள் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்,
"இவ்வாறு உயிரிழப்புகளும், உடைமைகளும், பயிர் நிலங்களும் வாழ்வாரத்தை நம்பி அன்றாட உணவுக்காக வைத்திருக்கின்ற நெற்களை கூட யானைகள் பறித்து செல்கின்றது.
யானவேலி அமைக்கப்படாமை
இந்த நிலைமை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கண்ணகி கிராம மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க அமைப்புகள் இணைந்து பல ஆர்ப்பாட்டங்கள், பல மகஜர்கள், பல செயற்பாடுகள் முன்னெடுத்தும் கூட இன்னும் இந்த யானைகளை அப்புறப்படுத்தவில்லை.
இதன்படி யானவேலி அமைத்துதராமை ஒரு வேதனையான விடயமாக இருக்கின்றது.
இதற்கமைய நேற்று(19.10.2023) கிராமத்துக்குள் உட்புகுந்த காட்டுயானை, கிராமத்தில் நடு வீதிகளில் உலாவி திரிந்து அங்கே ஒருவருடைய வீடையும் உடைத்து சென்றிருக்கின்றது.
ஆகவே இந்த நிலைமை நீடித்த வண்ணமே தமது கிராமத்தில் காணப்படுகின்றது" என சுட்டிக்காட்டியுள்ளனர்.