கொழும்பில் தம்பியை கொலை செய்த அண்ணன் : இறுதி அஞ்சலியில் கதறி அழுத சம்பவம்
கொழும்பு, கிருலப்பனையில் தனது சகோதரனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட சகோதரனின் சடலத்தை பார்க்க சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொலை செய்த சந்தேக நபர் மரண வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
கிருலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் அமில சந்தருவன் என்ற 29 வயதுடைய நபரே கடந்த 16ஆம் திகதி அவரது மூத்த சகோதரரால் கொலை செய்யப்பட்டார்.
சகோதரனால் கொலை
முச்சக்கரவண்டியில் தமது பிள்ளையை முன்பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மூத்த சகோதரன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சொத்துப் பிரச்சினையால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, கொலைக் குற்றத்திற்காக மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போதை பொருள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகோதரன், தன்னால் கொல்லப்பட்ட சகோதரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வீட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
தம்பியின் போதை பொருள் பழக்கத்தால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தான் தவறுதலாக கொலை செய்துவிட்டதாகவும் சந்தேக நபரான சகோதரன் கதறி அழுதுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
