பிரைட் ரைஸ் கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்
புதிய இணைப்பு
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு குறித்து பின்னர் அறிவிப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் திரு.ஹர்ஷன ருக்ஸான் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு
இதன்படி, 18 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது இன்று பிற்பகல் வேளையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
