அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது: அரிசி ஆலை உரிமையாளர்கள் பகிரங்கம்
மதுபான உற்பத்திக்காக அரிசியை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாகவே, சந்தையில் அரிசி தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
மதுபான உற்பத்திக்காக நாட்டு ரக நெல், வழக்கமான அரிசி உற்பத்தியில் விடுத்து, திசைதிருப்பப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், விவசாயிகளும் இதேபோன்ற காரணங்களை சுட்டிக்காட்டி, அரிசி விலையை நிலைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இருப்புக்கள் தொடர்பான அறிக்கை
இதற்கிடையில், அரசு நிர்ணயித்த விலையில் அரிசியை வாங்குவதில் சிரமம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சந்தைக்கு மேலும் நெருக்கடி ஏற்படுகிறது.
அண்மைய வாரங்களில், உள்ளூர் சந்தைகளில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இதனால் நுகர்வோருக்கான நாடு ரக அரிசிக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மதுபான உற்பத்தியில் அரிசியின் பயன்பாடு குறித்து தமக்கு தெரியாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வர்த்தக அமைச்சின் செயலாளர் அரிசி மற்றும் நெல் இருப்புக்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |