மற்றுமொரு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
யூரியா உரத்தின் விலை இந்த வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வழங்கும் நிகழ்வை அவதானித்தபோதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,உயர் பருவத்தில் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 தொடக்கம் 9000 ரூபா வரை குறைக்கப்படும்.
10,000 ரூபாவாக விலை குறைப்பு
ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ ரி.எஸ்.பி அல்லது மண் உரம் வழங்க விவசாயத்துறை பரிந்துரைத்துள்ளதுடன் அதே அளவு உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அத்துடன் பண்டி உரத்தின் விலை உயர்மட்டத்தில் உள்ளதால் அந்த உரத்தின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்குனுகொலபெலஸ்ஸ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக திரண்டிருந்த விவசாயிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
