இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் துவிசக்கர வண்டிகள்
இலங்கையில் தற்போது சாதாரண துவிசக்கர வண்டி ஒன்று ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், புதிய வடிவிலான துவிசக்கர வண்டிகள் ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு |
கடும் சிக்கலில் மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக முழு இலங்கையிலும் உள்ள மக்கள் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக போக்குவரத்து சார் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகின்றன.
இவ்வாறான நிலையில், கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
துவிசக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள துவிசக்கரவண்டி விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளவில் நாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த! அவரே தெளிவுப்படுத்தும் தகவல் (Video) |
அதிகரிக்கும் விலைகள்
மக்கள் துவிசக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளது.
தற்போதுவரை சாதாரண துவிசக்கரவண்டி ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாவைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட துவிசக்கர வண்டிகள், ஒரு இலட்சம் ரூபா வரையான விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், துவிசக்கர வண்டி உதிரிப்பாகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை வரும் சர்வதேச விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு |