வாகன உதிரிப்பாகங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே காரணம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சந்தையில் உதிரிப் பாகங்களின் விலை கூட வேகமாக உயர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலைமை காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
உதிரிப் பாகங்கள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பகுதி பயணிகள் பேருந்து துறை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan