இலங்கை வரும் சர்வதேச விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலும் நாளொன்றுக்கு சராசரியாக 105 விமானங்கள் நாட்டிற்கு வந்து செல்வதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
விமானகளுக்கு புதிய கட்டுப்பாடு

இலங்கையில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை வந்தால் திரும்பி செல்ல எரிபொருளுடன் வருமாறு விமான நிறுவகங்களுக்கு அறிவித்துள்ளோம்.
இந்த நிலைமை சீராகும் வரை இந்த நடைமுறையை தொடர்ந்து அமுல்படுத்த நேரிடும். தினமும் குறைந்தது 10,000 விமானப் பயணிகள் நாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
மட்டுப்படுத்தப்படும் ஊழியர்கள்

எவ்வாறாயினும், தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்களின் அழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இருப்பு 800 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan