உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளது
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை புதிய சுற்றில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியான பின்னர் உலக சந்தையின் கச்சாய் எண்ணெயின் விலை இன்று காலை மீண்டும் குறைந்துள்ளது.
அத்துடன் சீனாவின் நிதி கேந்திர நிலையமாக கருதப்படும் ஷெங்காய் நகரம் கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதை அடுத்து எரிபொருளுக்கான கேள்வி குறையும் என சீன அச்சம் வெளியிட்டிருந்தது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள புதிய விலைகளுக்கு அமைய பிரேன்டி குறூட் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெயின் விலை 109.97 டொலர்களாக இருந்தது.
இதற்கு முன்னர் அதிகாலையில் அதன் விலையானது 111.41 டொலர்களாக காணப்பட்டது. இந்த நிலையில் 1.0 வீதமாகவும் அமெரிக்க டொலரில் 1.07 என்ற வீதத்திலும் விலை குறைந்துள்ளது.