இலங்கையில் மின்சார விநியோக தடை எப்போது முடிவுக்கு வரும்...! வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் நடைமுறையிலுள்ள மின்விநியோக தடை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறிப்பிட்ட சில நபர்களால் ஏற்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலையை பயன்படுத்தி, பெற்றோல் நிரப்பு நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்காகவே திட்டமிட்ட வகையில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீளக்கூடிய ஒரே வழி நாட்டையும் அதன் வளங்களையும் விற்பதே என மக்களை நம்ப வைக்க முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தற்போதைய மின்வெட்டு தொடரும் என ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam