சூடு பிடிக்கும் அரசியல் களம்! எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விரைவில் மாற்றம்

SJB Ranil wickramasinghe Rohitha abeygunawardane
By Benat Jun 23, 2021 10:10 AM GMT
Report

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் சவாலாக அமையும். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்  என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக ஜனநாயக ரீதியில் புறக்கணித்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி மக்களாணைக்கு புறம்பாக செயற்பட்டதை இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக அறிந்துக் கொள்ள முடிந்தது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடு தழுவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது.

பொதுத்தேர்தல் இடம்பெற்று 10 மாதங்களுக்கு பிறகு அந்த ஒரு தேசிய பட்டடியல் ஆசனத்தின் ஊடாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின்  வருகை ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு சவாலாக அமையும்.

வெகுவிரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சிறந்த அரசியல்வாதி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்கும் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியனர் கொண்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளமுடியும்.

அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுகிறது. பல்வேறு கொள்கையினை கொண்ட கட்சிகள் ஒன்றினைந்து அரசாங்கத்தை அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. இக்கருத்து முரண்பாடு அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US