கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை