பொலிஸ் திணைக்களத்தில் உள்ளக யுத்தம் : வெளியாகும் தகவல்கள்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 'நீறு பூத்த நெருப்பாக' இருந்த உள்வீட்டு பிரச்சினை பொது வெளிக்கு வந்து புலனாய்வுத்துறை வரை சென்றுள்ளது.
தேசிய பொலிஸ் தலைமையகத்தில் நிர்வாக பொறுப்பதிகாரியான பிரதி பொலிஸ்மா அதிபரான லலித் பத்திநாயக்க மீது ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார்.
பிரச்சினைக்கான காரணம்
இந்த உள்வீட்டு பிரச்சினை தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்களாக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் தென் மாகாண பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தொடர்பில் தவறான,க ளங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொலிஸ் திணைக்களத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கடமையாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. உள்ளக தகவல்களின், படி லலித் பத்திநாயக்க வெளியாருடன் சேர்ந்து உள்ளக தகவல்கள் மற்றும் டெண்டர் தகவல்கள் முதல் கொண்டு வெளியில் வழங்கியுள்ளார்.
அதற்கான 12 தொலைபேசி உரையாடல்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏன் பிரதி பொலிஸ்மா அதிபரான லலித் பத்திநாயக்க இவ்வாறு செயற்பட்டார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் லலித் பத்திநாயக்க சிரேஷ் பொலிஸ் அதிகாரியாவார்.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் மேல் சேவை மூப்பை கொண்டவர்.தற்போது இவர் பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவராக கடமையாற்றுகிறார்.
பொலிஸ்மா அதிபர் நியமனம்
லலித் பத்திநாயக்க 2031 ஆம் ஆண்டு வரை சேவையாற்றுவதற்கான காலம் இருக்கிறது. அத்தோடு பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு 2029 வரையே சேவை காலம் உள்ளது.
பொலிஸ்மா அதிபர் நியமனத்தின் போது தனது பெயரும் சிரேஷ்டத்துவத்தின் படி பிரேரிக்கப்படும் என லலித் பத்திநாயக்க நினைத்தார்.ஆனால் உயர்பதவிகளுக்கான சபைக்கு அவரின் பெயர் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு செயற்பட்டாரோ தெரியவில்லை.ஜனாதிபதியின் தலையீட்டில் பிரியந்த வீரசூரியவின் பெயர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறே பிரச்சினை உருவாகியுள்ளது.இந்த பிரச்சினை பொலிஸ் திணைக்களத்தில் இன்று உருவாகியது அல்ல வரலாற்றில் அநேக தடவைகளில் இடம்பெற்றுள்ளது.
சேவை மூப்புகள்
பொலிஸ் திணைக்களத்தில் மூத்த அதிகாரிக்கே நிர்வாக பொறுப்பு வழங்கப்படுவது வழமையாகும்.அத்தோடு சிரேஷ்ட அதிகாரிக்கே பொலிஸ்மா அதிபர் நியமனம் வழங்கப்படும்.
அந்த நியமனத்தின் போது ஏற்படும் சில குறைப்பாடுகள் இருவருக்கிடையில் முரண்களை ஏற்படுத்துகின்றன.அது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். அதன் ஒரு உதாரணமாக பொலிஸ்மா அதிபராக இலங்ககோன் இருக்கும் போது எட்மின் காமினி நவரத்த வகித்துள்ளார்.

இவர்கள் ஆரம்பகாலத்தில் ஒன்றாக வேலை செய்து கொண்டு செல்கையில் கடைசி காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே நாம் இதை நோக்குகிறோம்.ஆனால் அவை வெளியில் வரவில்லை.இன்றை பிரச்சினை வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கலாம்.