மகிந்த நிகழ்ச்சியில் சர்ச்சையில் சிக்கிய அநுர அரசாங்கத்தின் பெண் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் தான் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் உள்ள புகைப்படங்கள் தொடர்பான திருமண விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அத்துடன் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

புகைப்படம் எந்த வகையிலும் திருத்தப்பட்டாலோ அல்லது கையாளப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி நிலந்தி கொட்டஹச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam