ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்

Ranil Wickremesinghe Law and Order Ranil Wickremesinghe Arrested
By Rukshy Oct 30, 2025 04:25 AM GMT
Report

பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விசாரணை இடம்பெற்றது.

செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட மற்றுமொரு பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட மற்றுமொரு பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

மறுநாளே மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்

கைது செய்யப்பட்ட பின்னர், விக்ரமசிங்கவுக்கு தமனி அடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என பிரதி மன்றாடியார் நாயகம் தீலீப் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் தடுப்புக்காவலில் இருந்தபோது அவரது நடத்தையையும் அவர் விமர்சித்துள்ளார்.

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ் | Dilip Peiris Doubt On Ranil S Medical Reports

பொதுவாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் பொது அறைக்கு மாற்றப்படுவார்கள். எனினும் இந்த சந்தேகநபர் மறுநாளே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க சிரித்துக்கொண்டே, மருத்துவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் என்றும் திலீப பீரிஸ் கூறியுள்ளார்.

சந்தேகநபர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் ஆபத்தான நிலையில் இருக்கும்போது போரிஸ் ஜோன்சனின் புத்தகங்களை வாசித்தமை தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரணில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பல்வேறு நபர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஒரு சாதாரண சந்தேகநபர் அல்லவென குறிப்பிட்ட மன்றாடியார் நாயகம், அவர் 36 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய நபர் என்று திலீப பீரிஸ் கூறியுள்ளார்.

எனவே பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

சனாவுக்கு என்ன நடந்ததோ உனக்கும்! ஆளும் கட்சியின் தவிசாளருக்கு கொலை மிரட்டல்

சனாவுக்கு என்ன நடந்ததோ உனக்கும்! ஆளும் கட்சியின் தவிசாளருக்கு கொலை மிரட்டல்

மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை 

இதன்போது வாதிட்ட ரணில் விக்ரமசிங்க தரப்பு சட்டத்தரணி, திலக் மாரப்பன, தமது சேவை பெறுநர் முதலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது, மணிக்கணக்கில் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டார்.

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ் | Dilip Peiris Doubt On Ranil S Medical Reports

இதன்போது கேள்வி எழுப்பிய நீதிவான், சந்தேகநபர் ஆபத்தான நிலையில், ஒருவேளை மரணத்திற்கு அருகில் இருந்திருக்கலாம் என்று நீங்கள் முன்னர் நீதிமன்றத்தில் சொல்லவில்லையா என்று திலக் மாரப்பனவிடம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த மாரப்பன, தமனி அடைப்பு இன்னும் உள்ளதாகவும், இப்போது மற்றொரு பாதை வழியாக இரத்தம் பாய்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து திருப்திகரமாகக் கண்டறிந்த பின்னரே முன்னாள் நீதவான் பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறிய நீதிவான் நெத்திகுமார, நீதிமன்றம் பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்யாது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால், அவற்றைத் தயாரித்த மருத்துவர்கள் அவற்றின் அடிப்படையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிவான், தொடர்புடைய பல விடயங்களை ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இளைஞன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்கள்

இளைஞன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US