இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிய புலம்பெயர்ந்தவர்கள்
புலம்பெயர்ந்தவர்கள் யுத்தகாலத்தில் இருந்ததை போல தற்போது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் குழுக்களாக இல்லை என்று அரசியல் ஆய்வாளர் என்.சரவணன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,புலம்பெயர்ந்தவர்கள் என்ற வார்த்தை மிகப்பெரும் பேசுபொருளான வார்த்தையாக பௌத்த தேசிய வாதிகளிடம் இருந்தது.
அது தற்போது இல்லையென்பது இலங்கை மக்களுக்கும் புரிந்திருக்கும். ஒரு குடையின் கீழிருந்த புலம் பெயர்ந்தவர்கள் எல்லாவிடயத்திலும் தீர்மானகரமான சக்தியாக இருந்தார்கள்.
ஆனால் தற்போது செயலிழந்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
அதனை தொடரந்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்க்ககூடிய காலம் இன்னும் வரவில்லை, அவர்கள் சரியான பாதையில் செல்கின்றார்கள். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்த அரசாங்கத்தையும் அமைக்கும்.
நாட்டை சீரழித்தவர்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்க மாட்டார்கள்.
இந்த அரசாங்கத்தை மாற்றுவதாயின் இதனை விட சிறந்தவர்கள் உருவாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri