பாதாள உலக குழுக்களுக்கு முற்றுப்புள்ளி! நீதிமன்றம் சென்ற ராஜபக்ச குடும்பத்தினர்
பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான திகதியை நிர்ணயிக்க முடியும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில், பிரதிவாதி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதிகளால் கோரப்பட்ட சில ஆவணங்கள் இன்னும் கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும், அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பான ஒப்புதல்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.
அதன்படி, இந்த வழக்கை மீண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பான ஒப்புதல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri