கடற்றொழிலை நம்பி வாழ்ந்த பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை (VIDEO)

Srilanka Recent News Fishers Man Issue Pransis Joseph
By Sudaron Mar 25, 2022 05:49 PM GMT
Report

கிளிநொச்சி  - பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அட்டை வளர்ப்பு தொழில் காரணமாக கடற்றொழிலை நம்பி வாழ்ந்த பெண்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், பண்ணைகளுக்கான அட்டைக் குஞ்சுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அட்டை தொழில் வழிமுறைகளால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

அத்துடன் பெரும் முதலீடுகளைச் செய்து அட்டை பண்ணைகளை அமைத்துள்ள போதும் அவற்றிற்கு தேவையான அட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்கள் காணப்படுவதாகவும், வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற அட்டை குஞ்சுகள் இந்த சூழலுக்கு ஏற்றதாக இல்லையென்றும் அவை அழிவடைந்து விடுகின்றன என்றும் கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  


இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அட்டை வளர்ப்பு தொழில் மிகவும் வருமானந்தரக்கூடிய ஒரு தொழில் முறையாகும் இதனை முன்னெடுக்கும் போது ஏனைய தொழில்கள் பாதிப்படையக் கூடாது. என்பதுடன் இன்றை சூழலில் அட்டைக்குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்டுகின்றன.

2018 ஆம் ஆண்டுஅட்டைக்குஞ்சு உற்பத்திக்கு பூநகரி வெட்டுகாடு பகுதியில் அட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து குஞ்சுகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையிலே அதற்கான காணியை கோரிய போது அப்போதைய முதலமைச்சர் காணியை தர மறுத்ததால் பாரிய திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக உதவித் திட்டங்களை வழங்கியிருந்தாலும் மேலதிகமாக தங்களுடைய முதலீடுகளைச் செய்து பண்ணைகளை அமைத்திருந்தாலும் அவற்றுக்கான அட்டைகளை பெற்றுக் கொள்வதில் பண்ணையாளர்கள பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பெருமளவான வருமானத்தை ஈட்டக்கூடிய அட்டைப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கான அட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.

அதாவது இந்த பிரதேசத்திலேயே இயற்கையாக உற்பத்தியாகும் குஞ்சுகளை அந்த அட்டை பண்ணைகளுக்கு விடுவதன் மூலம் உரிய இலக்கினை எட்ட முடியும் ஆனால் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற குஞ்சுகள் மூலம் எந்தவிதமான நன்மையும் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வலைப்பாடு இரணைமாதா நகர் பூநகரி வெட்டுகாடு போன்ற கடற்பகுதிகளில் இயற்கையாகவே உற்பத்தியாகும் அட்டைக் குஞ்சுகளை அப்பகுதிகளில் இருக்கின்ற பெண்கள் தினமும் கேரிகரித்து அதன் மூலம் வருமானத்தை பெற்று வந்தனர் ஆனால் இப்பொழுது இந்தப் பகுததிகளில் பண்ணைகளை அமைத்துள்ளமையால் அவர்களது தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அட்டைகள் வளர்ப்புக்காக சிலாபம் மற்றும் புத்தளம் அதேபோல அரியாலையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் அட்டை பண்ணைகளிலிருந்து குஞ்சுகளை பெற்று இங்கே உள்ள அட்டை பண்ணைகளில் விடுகின்ற போது அந்த குஞ்சுகள் அழிந்துவிடுகின்றன.

ஆகவே இந்த கடல் பிரதேசத்தில்உற்பத்தியாகும் குஞ்சுகளை இந்த பிரதேசத்தில் வளர்க்கக் கூடியதாக இருக்கும் என்பதாகும் அட்டைப் பண்ணைகளால் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழியைக்கடற்றொழில் அமைச்சர் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர்

குறிப்பாக இரவு வேளைகளில் வெளிச்சம் பாவித்து அட்டை பிடிப்பது என்பது இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடிக்கப்படுகிறது அதாவது சிலிண்டர் பாவித்து பரவை கடல் அட்டை பிடிக்கும் தொழிலை செய்ய முடியாது. .

அவ்வாறு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை கடற்படையினர் தடுத்து வருகின்றனர் சட்டவிரோத கடல் தொழிலில் ஈடுபடுவோர் கடல் அட்டைகளை மட்டும் பிடிக்கவில்லைஏனைய வளங்களையும் எடுத்துச் செல்கின்றனர். எனவே இரவு அட்டை தொழில் என்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US