அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்
அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைத்து கட்சிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தையின் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வகட்சி ஆட்சி உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனடிப்படையில், தற்போதுள்ள அமைச்சரவையில் வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளை இணைத்து சர்வகட்சி ஆட்சியின் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சர்வகட்சி ஆட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனமான செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் தெரியவருகிறது.
எனினும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri