புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய்
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் டொலர்களுக்கு குறைந்தபட்சம் 240 ரூபாய் செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், எனது அமைச்சினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வெளிநாடு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்பீடு வழங்குவதை கட்டாயமாக்கும் பணியும் நடந்து வருகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam