ஆட்ட நிர்ணய விவகாரம்: தம்புள்ளை அணியின் நிர்வாக அதிகாரி கட்டுநாயக்கவில் கைது
எல்பிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த நிர்வாக அதிகாரியொருவர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமீம் ரஹ்மான் என்ற குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணத் தடை
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri