வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்க கடலில் இறங்கிய மீனவர் மாயம்
யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்காகக் கடலில் இறங்கிய மீனவர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டைப் பிடிப்பதற்காகச் சிலிண்டருடன் கடலினுள் இறங்கியுள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை மேலே இழுத்தபோது அவரைக் காணவில்லை என்று படகிலிருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் இரு நாட்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீனவர் புத்தளம் - கற்பிட்டிப் பகுதியைச் சேர்த்தவர் என்றும், குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடித்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
