பேச்சுவார்த்தை தோல்வி - ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகளால் பதற்றம்

Colombo Galagoda Aththe Gnanasara Thero
By Amal Oct 15, 2026 02:09 PM GMT
Report

புதிய இணைப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.

சிறையில் உள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடும் வரை தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க முன்னதாகக் கலந்துரையாடியுள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பதிலில் அதிருப்தி வெளியிட்ட பிக்குகள், அரசாங்கத்திடமிருந்து சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, கடும் மழைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நான்காம் இணைப்பு 

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தமது கோரிக்கைக்கு சாதகமான முடிவை அறிவிப்பதற்காக 10 நிமிட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அந்தக் காலப்பகுதிக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் பௌத்த பிக்குகள் எச்சரித்துள்ளனர்.

மூன்றாம் இணைப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட “சுதந்திர பாத யாத்திரை” ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வந்தடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்னர் சுதந்திர பாத யாத்திரை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தடைந்தபோது, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பேச்சுவார்த்தை தோல்வி - ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகளால் பதற்றம் | The Justice Saffron Robe Peace March Concludes

தற்போது, பௌத்த பிக்குகள் தலைமையிலான பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பிரித் பாராயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரை, கடவத்தை நகரிலிருந்து ஆரம்பித்து கொழும்பை வந்தடைந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

பிக்குகளின் பாதயாத்திரையானது தற்போது  ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கிப் பயணித்த பாதயாத்திரை, தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்லும் வகையில் தமது பயணத் திட்டத்தை மாற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை தோல்வி - ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகளால் பதற்றம் | The Justice Saffron Robe Peace March Concludes

தெமட்டகொடை சந்தி வரை சென்றடைந்த இந்தப் பாதயாத்திரை, தற்போது மாளிகாவத்தை நோக்கிப் பயணித்து வருவதாகவும், அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை தோல்வி - ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகளால் பதற்றம் | The Justice Saffron Robe Peace March Concludes

பேச்சுவார்த்தை தோல்வி - ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகளால் பதற்றம் | The Justice Saffron Robe Peace March Concludes

முதலாம் இணைப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட “சிவரட்ட யுக்திய – தேசிய சூளுரை ஏற்பு மற்றும் சுதந்திரப் பேரணி” இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடைகிறது.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து இந்தப் பாதயாத்திரை ஆரம்பமானது.


பேரணி

கடுகன்னாவ, கேகாலை, வரக்காபொல மற்றும் நிட்டம்புவ வழியாகப் பயணித்த பேரணி, நேற்று (14) கடவத்தையைச் சென்றடைந்தது.

இன்று காலை கடவத்தையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் பேரணி, கொழும்பு நகரை நோக்கிப் பயணித்து, ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு முன்பாக நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வி - ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகளால் பதற்றம் | The Justice Saffron Robe Peace March Concludes

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


மாகாணசபை தேர்தல்! ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கலாமென அரசியல் ஆய்வாளர் எச்சரிக்கை

மாகாணசபை தேர்தல்! ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கலாமென அரசியல் ஆய்வாளர் எச்சரிக்கை

ஞானசார தேரரின் சிறை ஆடை விவகாரம்: மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஞானசார தேரரின் சிறை ஆடை விவகாரம்: மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US