மாகாணசபை தேர்தல்! ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கலாமென அரசியல் ஆய்வாளர் எச்சரிக்கை
நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாணசபை தேர்தல்கள் இனி நடைபெறாமலேயே போகக்கூடும் என அரசியல் ஆய்வாளரும், முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தனது முன்னோடியான லியோனல் போபகேவிடம், தமது கட்சிக்கு மாகாணசபைகளோ அல்லது இந்திய - இலங்கை ஒப்பந்தமோ தேவையில்லை எனக் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தலுக்கான யோசனையைச் சமர்ப்பிக்கத் தெரிவுக் குழுவுக்கு எவ்வித காலக்கெடுவும் வழங்கப்படவில்லை. இது இடைநிலை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும்.
இந்தநிலையில், ஒட்டுமொத்த தேர்தல் முறைமையையும் ஆராய மற்றொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாக்களிக்கும் உரிமையையே ஒட்டுமொத்தமாகப் பறிக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கலாம் என எச்சரித்த அவர், இந்த விடயத்தில், நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சட்டத்தின் ஆட்சி ஆயுதமாக்கப்படுவதாக சட்டத்தரணி சிரால் லாக்திலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுர வழங்கிய உறுதி
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்த போதிலும், தற்போதைய சூழலில் சட்டத்தின் ஆட்சி அரசியல்மயமாக்கப்பட்டு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக சிரால் லக்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
"கெட்டவர்களின் கொடூரத்தை விட, நல்லவர்களின் மௌனமே மிகவும் ஆபத்தானது" என்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கூற்றை மேற்கோள் காட்டி அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri