சந்திவெளி திகிலிவெட்டை பாதை பாவனைக்கு உகந்ததில்லை (Photos)
மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்படவில்லை என கிழக்குமாகாண இயந்திரப் பொறியியலாளர் நேரடியாக பார்வையிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாகனங்களை பரீட்சித்து பார்ப்பதற்காகவும் மதிப்பீடு செய்வதற்காகவும் சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய இரு தினங்கள் மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளார்.
மாற்று நடவடிக்கை
இதன் போது பாதைப்படகும் பரீட்சிக்கப்பட்டதன் அடிப்படையின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதனை தெரிவிக்கையில், பாதையின் அடிப்பாகத்தால் பாதையினுள் நீர் உட்புகுவதால் ஓட்டுனர்கள் நீர் இறைக்கும் பம்பி மூலம் நீரை இறைத்ததன் பின்பே பாதையை நகர்த்த வேண்டியுள்ள நிலையுள்ளமையால் இதற்கான மாற்று நடவடிக்கைகளை சபையின் செயலாளர் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இயந்திர கொள்வனவு

50 நாட்களாக மட்டும் தவிசாளராக இருந்த நாட்களில் பாதைக்கான இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாட்டொன்றை முன்னெடுத்துள்ளோம்.
புதிதாக பாதை ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதிவசதி (ஆறரைக்கோடி) சபையில் போதமையால் இன்றுடன் சபை கலைக்கப்படுகின்றது. ஆதலால் இதற்கான மாற்று ஏற்பாட்டை எதிர்வரும் நாட்களில் சபைச் செயலாளர் மேற்கொள்வார் என எதிர்பார்கின்றேன் என கோறளைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.கமலநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri