மின்சார நெருக்கடி ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது! நளிந்த
மின்சார சபை பணியாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் இருந்தபோதிலும், நாட்டில் மின்சார நெருக்கடியோ அல்லது மின்வெட்டோ ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை மீறுவோர்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தொடர்ச்சியான மின்சார விநியோகம் உறுதிசெய்யப்படும் என்றும், சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அதேநேரம், இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படாவிட்டால் நெருக்கடியை தவிர்க்க முடியாது என்றும், அதனை தனியார்மயப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எந்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம். வெளியேற விரும்புவோருக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும்,” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



