அநுரவிற்கு கைது மிரட்டல் - வெளியான இரகசியம்! ஆபத்தில் தென்னிலங்கை
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஜீன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார்.
இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை.
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல்,உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஒருவருட கால ஆட்சியில் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்கள் ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கின்றார்களா என்று கேள்வி எழுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...



